ஹனுமான் பெயரில் உருவாகும் சூப்பர் ஹீரோ படம்.. டீசர் குறித்த அறிவிப்பு !

hanuman

'ஹனுமான்' படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா 'Awe' படத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஹனுமான் என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி வருகிறார். தேஜா சஜ்ஜா இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை வரலட்சுமி சரத்குமாரும், அம்ரிதாவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் அம்ரிதா நடிக்கிறார்.

hanuman

அதேபோன்று மைக்கேல் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் வினய் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 21-ஆம் தேதி 12.33 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

Share this story