பி.டி வாத்தியராக நடிக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி... பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு !

adhi

 ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல இசையமைப்பாளராக இருந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். பன்முக திறமைக் கொண்ட இவர், ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களுக்கு பிறகு ‘வீரன்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

adhi

இந்த படத்திற்கு ஆதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஹீரோவாக நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளார். 

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை இயக்கவுள்ளார். விளையாட்டு கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஆதி, கனகவேல் என்ற கதாபாத்திரத்தில் பிடி வாத்தியராக நடிக்கிறார். இதையொட்டி மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் கூடுதல் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறது. 

null 

 

 

Share this story