19 வருட திரைப்பயணத்தில் இப்படி ஒரு இயக்குனரை பார்த்ததில்லை.. - நடிகர் பரத் நெகிழ்ச்சி..

19 வருட திரைப்பயணத்தில் இப்படி ஒரு இயக்குனரை பார்த்ததில்லை.. -  நடிகர் பரத் நெகிழ்ச்சி..

19 வருட சினிமா வாழ்க்கையில் மிரள் பட  இயக்குனரைபோல் வேறு ஒருவரை பார்த்தது இல்லை என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.

Miral

அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிரள்’. இந்த படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.  வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்தப்படம் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியாக உள்ளது.

miral

இந்நிலையில், சென்னை பிரசாத் லேப்பில் நடிகர் பரத், வாணி போஜன், கே.எஸ் ரவிக்குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்ட  "மிரள்" திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய  நடிகர் பரத், “என்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு பயணம் உள்ளது. கதையை கேட்டு,அதற்கு தயாரிப்பாளர்கள் கிடைத்து,படம் செய்து முடிப்பதற்குள் என  நீண்டபயணம் உள்ளது. இது எனக்கு மட்டுமல்ல எல்லா நாயகர்களுக்கும் நடப்பது தான் அதேபோல பயணப்பட்டு வந்தது இந்த மிரள் திரைப்படம். 19 வருட சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு இயக்குனரை பார்த்தது இல்லை.  படத்தின் டப்பிங் போதே படத்தின் மீதான நம்பிக்கை கூடியது. கட்டாயம் இந்த படம் உங்களை திருப்தி படுத்தும்” என்றார்.

Share this story