அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி இடையே காதலா??.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி இடையே காதலா??.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. 

நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி இணைந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் விஷாலின் 'ஆக்‌ஷன்' படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி. மலையாள நடிகையான இவர்  'ஜகமே தந்திரம்', 'பொன்னியின் செல்வன்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமானார். சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்து வெளியான 'கட்டா குஸ்தி' திடைப்படம்  நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்தப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து 'கிறிஸ்டோபர்', 'கிங் ஆஃப் கோதா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் அவரதாமும் எடுத்த ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி இடையே காதலா??.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. 

இதேபோல், கைதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பரிட்சையமானவர் அர்ஜுன் தாஸ்..  தனித்துவமான நடிப்பாலும், கம்பீரமான குரலாலும் ரசிகர்களை கவர்ந்த அர்ஜுன் தாஸ், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’,  ‘அந்தகாரம்’, ‘புத்தம் புது காலை விடியாதோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து பல படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.  

இந்த நிலையில், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி தனது சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்துள்ள புகைப்படம்,  தற்போது வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில்  நடிகர் அர்ஜுன் தாஸுடன் இருக்கும் புகைப்படத்தை ஹார்ட் எமோஜியுடன் பகிர்ந்துள்ளார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மறுபுறம் இருவரும் இணைந்து ஏதேனும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.  ஆனாலும்,  பெரும்பாலானோர் இருவரும் காதலித்து வருவதாகக் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Share this story