விஜய்யை மீண்டும் சீண்டிய எச். ராஜா – கொந்தளித்த ரசிகர்கள்.

photo

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்று ஒரு ஸ்பொஷல் தினம், காரணம் ‘வாரிசு’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. அந்த டிரைலரை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் தற்போது விஜயின் ரசிகர்கள் கொந்தளிக்கும் வகையில் எச் ராஜா ஒரு சம்பவம் செய்துள்ளார்.

photo

தில்ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார், இவர்களளோடு இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையில் படல்கள் தாறுமாறாக உருவாகி ஹிட் அடித்தது.

photo

 பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.இப்படியிருக்க, சினிமா விநியோகஸ்தரும் அரசியல் பிரமுகருமான ஜே.எஸ்.கே.கோபி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று அணில் வேட்டைக்கு செல்ல உகந்த நாள்என்று பதிவிட்டுள்ளார்அந்த பதிவின் கமெண்ட் செக்க்ஷனில் எச். ராஜா’ எந்த அணில்’ என கேட்டுள்ளார்.அதற்கு ஜே.எஸ்.கே.கோபி, ‘அது வேற அணில். வேற டிபார்ட்மெண்ட்என்று பதிலளித்துள்ளார்.

photo

ஏற்கனவே கத்தி, மெர்சல், பீஸ்ட் படங்கள் வெளியீட்டின் போது விஜய்க்கு எதிராகப் பேசிய எச். ராஜா, விஜய் ரசிகர்களால் நன்கு ஃபிரை செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.

Share this story