‘ஜெய் பீம்’ இயக்குனருடன் மீண்டும் கூட்டணி.. சூர்யாவின் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்

suriya 43

 ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா சமூக நலன் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்‌. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் 'ஜெய் பீம்'. இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக உருவான இப்படத்தை டிஜே ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. 

suriya 43

பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் விருதுகளை குவித்தது. இந்த  படத்தின் வெற்றிக்குப் பிறகு டிஜே ஞானவேலின் படத்தில் மீண்டும் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. 'ஜெய் பீம்' போன்று சமூக நலன் சார்ந்து உருவாக உள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

suriya 43

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர பாலாவுடன் 'வணங்கான்' படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களையெல்லாம் முடித்து விட்டு சுதா கொங்கரா, வெற்றிமாறன் ஆகியோர் படங்களில் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story