புத்தகமாக வெளியாகும் ‘ஜெய் பீம்’.. குட் நியூஸ் சொன்ன சூர்யா !

jai bhim

‘ஜெய் பீம்’ திரைப்படம் புத்தகமாக உருவாகியுள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். 

 இருளர் பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்து பேசிய திரைப்படம் ‘ஜெய் பீம்’. ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் இயக்குனர் ஞானவேல் டிஜே ஞானவேல் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்தார். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. 

jai bhim

கடந்த 2022- ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமூகத்தில் ஒரு மாற்றத்தையே கொண்டு வந்த இந்த படம் பல சர்வதேச விருதுகளையும் குவித்தது. குறிப்பாக கோல்டன் குளோப் நாமினேஷனிலும், ஆஸ்கார் போட்டியிலும் பங்கேற்றது. 

jai bhim

இந்நிலையில் இந்த படம் புத்தக வடிவில் தயாராகியுள்ளது. இது குறித்து 2டி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “இது ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன், படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ். 2டி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆசிரியர் சமஸ் ஆகிய இருவரும் இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டு ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


 

Share this story