‘ஜவான்’ கதை திருட்டு விவகாரம்.. இயக்குனர் அட்லீயிடம் விசாரணையா ?

atlee

‘ஜவான்’ படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் விசாரணை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. 

இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ‘ராஜாராணி’ படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானவர். இதையடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இதனால் அட்லியின் திரைப்படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

atlee

தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே இயக்குனர் அட்லி மீது இயக்குனர் மாணிக்கம் நாராயணன் பரபரப்பு புகார் ஒன்றை சமீபத்தில் கொடுத்திருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்ட அந்த புகாரில் விஜய்காந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ கதையை தான் தற்போது ‘ஜவான்’ என்ற பெயரில் அட்லி திரைப்படமாக எடுத்து வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

atlee

இந்நிலையில் ‘பேரரசு’ பட இயக்குனர் மாணிக்கம் நாராயணனிடம் விளக்கம் கேட்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதில் பேரரசு மற்றும் ஜவான் ஆகிய இரு படங்களும் ஒரே கதை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட உள்ளது. இவரின் பதிலை வைத்தே அட்லியிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. 

Share this story