வெளியீட்டு தயாரான ஜெயம் ரவியின் ‘அகிலன்’.. புதிய அப்டேட்

agilan

 ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அகிலன்’. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு மறைந்த பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

agilan

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் உண்மை கதை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருக்கும் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்முடன் காத்திருந்தனர்.  இந்நிலையில் இப்படம் பிப்ரவரி 17 மற்றும் 24-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது ஜெயம் ரவி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story