கொடூரமான லுக்கில் ஜெயம் ரவி.. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

Iraivan

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தையடுத்து 'ஜன கன மன' படத்தின் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து முடித்திருக்கிறார். 

Iraivan

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஜெயம் ரவியின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘இறைவன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story