சபரிமலை சாமி தரிசனம் செய்த 'பொன்னியின் செல்வன்' நடிகர்கள்!!

சபரிமலையில் நடிகர் ஜெயராம் உடன் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம் செய்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி கார்த்தி விக்ரம், ஐஸ்வர்யாராய், த்ரிஷா,ஜெயராம் ,சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இத்திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று படத்தை பிரமோஷன் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர் . இதற்கான புகைப்படங்களை பதிவிட்ட நடிகர் ஜெயம் ரவி , "பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !! "என்று குறிப்பிட்டுள்ளார்.