சிறந்த நடிக்கருக்கான விருதைப்பெற்ற ஜெயம் ரவி... பிரபல நிறுவனம் வழங்கியது !

jayam ravi

 நடிகர் ஜெயம் ரவிக்கு சிறந்த நடிக்கருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. 

jayam ravi

தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வரும் அவர், அகிலன், சைரன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கவுள்ளது. 

jayam ravi

இதற்கிடையே இந்த படங்களுக்கு முன்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயம் ரவி நடித்து வந்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் பொன்னியின் செல்வனாக நடிகர் ஜெயம் ரவி நடித்திருந்தார். அதாவது அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் வீரமிக்க இளவரசனாக நடித்திருந்தார். ஜெயம் ரவியின் அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

jayam ravi

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வி4 நிறுவனம் வழங்கிய இந்த விருதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளளார். இதேபோன்று சிறிய பழுவேட்டையராக நடித்த இயக்குனர் பார்த்திபனுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. 

Share this story