'நான் பார்த்த அற்புத உள்ளம்' - 'லாரன்ஸ்' குறித்து நெகிழ்ந்த எஸ்.ஜே‌.சூர்யா !

JigarthandaDoubleX

'ஜிகர்தண்டா 2' படத்தின் நெகிழ்ச்சியான விஷயங்களை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்துள்ளார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.  இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. 

JigarthandaDoubleX

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே‌.சூர்யா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததது. 

JigarthandaDoubleX

இந்நிலையில் இப்படத்தின் 36 நாள் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் எஸ்ஜே சூர்யா, 36 நாள் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நிறைவுபெற்றுள்ளது. ஷெட்டியூல், கான்செப்ட், செட், போட்டோகிராபி ஆகியவை மிகவும் அருமையாக இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. அருகில் நான் பார்த்த அற்புத உள்ளய் ராகவா லாரன்ஸ் என்று அவர் தெரிவித்துள்ளார். 


 

Share this story