‘துணிவு’ டப்பிங்கை தொடங்கிய ஜான் கொக்கன்... புதிய அப்டேட்

thunivu
 ‘துணிவு’ படத்தில் தனது பகுதி டப்பிங்கை ஜான் கொக்கன் இன்று தொடங்கியுள்ளார். 

அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

thunivu

ஏற்கனவே இப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் தனது பகுதி டப்பிங்கை நிறைவு செய்துவிட்டனர். இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கன் இன்று தனது பகுதி டப்பிங்கை தொடங்கினார். விரைவில் இந்த டப்பிங் பணிகள் நிறைவுபெறும் என கூறப்படுகிறது. 

thunivu

வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் அதிக அளவு திரையரங்குகளில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Share this story