வில்லன் நடிகரின் டிரெய்லரை வெளியிடும் சிம்பு.. படக்குழு அறிவிப்பு !
எஸ்.ஜே.சூர்யாவின் படத்தின் டிரெய்லர் நடிகர் சிம்பு வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தரி சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடமையை செய்’. இந்த படத்தில் வில்லன், கதாநாயகன் என இருவேடங்களில் கலக்கி வரும் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை கணேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே தயாரான இப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை கைப்பற்றி இந்த மாதம் வெளியிட உள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு நாளை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

