விநோத நோயால் பாதிக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா... ‘கடமையை செய்’ டிரெய்லர் வெளியீடு !
எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ படத்தின் டிரெய்லரை சிம்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கடமையை செய்’. சுந்தரி சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படதில் நடிகை யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ‘ஸ்கூப்பர்’ என்ற விநோத நோயால் கதாநாயகன் பாதிக்கப்படுகிறார். அப்போது தன்னை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மொத்த கதை. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

