ஆக்ஷனில் மிரட்ட வருகிறான் ‘கலகத்தலைவன்’.. உதயநிதி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Kalagathalaivan

 உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

காமெடி ஜானர் திரைப்படங்களில் நடித்து வந்த உதயநிதி, தற்போது ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். அந்த வகையில் உதயநிதியின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத்தலைவன்’. ‘தடம்’ படத்தின் மூலம் பிரபலமான மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Kalagathalaivan

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் மெட்ராஸ் புகழ் கலையரசனும், பிக்பாஸ் நடிகர் ஆரவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Kalagathalaivan

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 18-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


 

Share this story