மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கமல்ஹாசன்... பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் ?

kamal

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார். 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, பிக்பாஸ்,. அரசியல் என பிசியாக வலம் வருகிறார் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்த கமலஹாசன், தெலுங்கு மூத்த இயக்குனர் கே விஸ்வநாத் சந்தித்து நலம் விசாரித்தார். இதுதவிர அங்கு சில நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். 

கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில்இன்று வீடு திரும்பியுள்ளார். இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் தனது இயல்பான பணிகளுக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய கமலுக்கு திடீரென உடல்குறைவு ஏற்பட்டது‌. காய்ச்சல்‌ மற்றும் இருமல் கடுமையாக இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் ஒரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 

இந்நிலையில் உடல்நிலை சற்று தேறிய நிலையில் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இதையடுத்து இரண்டு வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கமலை அறிவுறுத்தியுள்ளனர். அதனால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Share this story