கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இணையும் புதிய படம்.. இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..

கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இணையும் புதிய படம்.. இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..

கமல்ஹாசன் எச்.வினோத் கூட்டணி தொடர்பான பட அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

indian 2

விக்ரம் படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தன்னுடைய  அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வகையில் ஏற்கனவே பாதியில் நின்ற இயக்குனர் ஷங்கருடன் இந்தியன் இரண்டாம் பாகத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் சென்னையில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம்  படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் என்ற  மலையாள இயக்குனருடன் ஒரு படமும், இயக்குனர் பா. ரஞ்சித்துடன் ஒரு படமும் என ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட  இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.  

ajith-and-vinoth
இந்நிலையில் எச்.வினோத் கூட்டணியில் புதிய படமொன்றில்  இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹெச். வினோத் தற்போது  அஜித்தின் துணிவு படத்தை இயக்கி வருகிறார்.  இந்தப்படம் வருகிற பொங்கல் பண்டிகையின் போது வெளியாக உள்ளது.  இந்த நிலையில்  ஹெ.வினோத்தும், கமல்ஹாசனும்  இணையவுள்ளதாகவும்,  அதற்கான அறிவிப்பு இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை  கமல்ஹாசனின் பிறந்தநாள்  கொண்டாடப்பட உள்ளதை  முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.   இந்தியன் - 2  முடித்த கையோடு எச்.வினோத் கூட்டணியில் நடிகர் கமலஹாசன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Share this story