அண்ணனுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்.. யார் யார் இருக்கிறாங்கன்னு பாருங்க

kamal

தனது அண்ணன் சாருஹாசன் மற்றும் குடும்பத்துடன் நடிகர் கமல் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

kamal

இந்திய சினிமாவில் வியக்கத்தக்க நடிகராக இருப்பவர் நடிகர் கமல். ஒரு மனிதனுக்கு சினிமா மீது இவ்வளவு காதல் எப்படி இருக்கும் என்பதை கமலை பார்த்து தெரிந்துக் கொள்ள முடிகிறது. சினிமாவில் அவர் செய்யாத விஷயமே இல்லை. பன்முக திறமையாளராக இருக்கும் அவரை ரசிகர்கள் இப்போதும் வியந்து பார்த்து வருகின்றனர். 

kamalkamal

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 68 வயதிலும் இளம் நடிகர்களுடன் போட்டிப்போட்டு நடித்து வருகிறார். இதுவரை 233 படங்களில் நடித்துள்ள அவர், சினிமாவின் பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரின் திரைப்படங்கள் இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தற்கால சினிமாவை மிஞ்சுமளவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டார். 

kamal

இந்நிலையில் இன்று தனது 68 வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறது. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவரோ தனது அண்ணன் சாருஹாசன் வீட்டில் எளிய முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் சாருஹாசன், அவரது மனைவி கோமளம், இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி, அனுஹாசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சித்தப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 

kamal

 

 

Share this story