கார்த்தியின் ‘ஜப்பான்’ ஃப்ர்ஸ்ட் லுக் எப்போது ?... முக்கிய அறிவிப்பு வெளியீடு !

japan

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி, தேசிய விருதுபெற்ற இயக்குனர் ராஜூ முருகனுடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து 4வது படமாக ராஜூ முருகன் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

japan

வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குனர் விஜய் மில்டன், ‘புஷ்பா’ படத்தில் மங்களம் சீனு என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிய தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது. 

japan

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் விரைவில் மிகப்பெரிய பொருட்செலவில் படப்பிடிப்பு தூத்துக்குடி பகுதியில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story