ராஜூ முருகன் - கார்த்தி கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !

japan

ராஜூ முருகன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. 

japan

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் கார்த்தி அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது. 

japan

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

japan

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் தொடக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, இயக்குனர் ராஜூ முருகன், நடிகை அனு இமானுவேல் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். தற்போது பூஜை நிகழ்ச்சி நிறைவுபெற்றுள்ள நிலையில் விரைவில் தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

japan

Share this story