தொடங்கியது கார்த்தியின் ‘ஜப்பான்’.. படப்பிடிப்பு குறித்து சூப்பர் அப்டேட் !
கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் இப்படத்தை தேசிய விருதுபெற்ற இயக்குனர் ராஜூ முருகன் இயக்குகிறார். ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களுக்கு ராஜூ முருகனின் 4வது படைப்பாக இப்படம் உருவாகிறது.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குனர் விஜய் மில்டன், ‘புஷ்பா’ படத்தில் மங்களம் சீனு என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிய தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது. வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில் இந்த போஸ்டரில் வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி இருக்கிறார். இது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் இன்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.