‘கருமேகங்கள் கலைகின்றன’ நிறைவு... தங்கர்பச்சன் படத்தின் முக்கிய அப்டேட்

KarumegangalKalaiginrana

தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக சிந்தனையுடன் திரைப்படங்களை இயக்கி வரும் தங்கர் பச்சான், நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

KarumegangalKalaiginrana

இந்த படத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியாக பாரதிராஜா நடித்துள்ளார். அவரது மகனாக கௌதம் மேனனும், மகளாக அதிதி மேனனும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறது. இந்த படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

KarumegangalKalaiginrana

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கும்பகோணம் பகுதியில் நடைபெற்றுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தயாரிப்பு பணிகளை உடனடியாக தொடங்கப்பட்டு விரைவில் பணிகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


 

 

Share this story