டார்க் காமெடியில் ‘குத்துக்கு பத்து’... அசத்தல் டிரெய்லர் வெளியீடு !
டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள ‘குத்துக்கு பத்து’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குத்துக்கு பத்து’. இந்த வெப் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையத்தள குழுவினர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் ஷா ரா, பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா, ஜான உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய சென்ற நண்பருக்கு அடி விழுந்தது. இந்த அடிக்கு பிறகு நடக்கும் களேபரங்களை வைத்துதான் மொத்த வெப் தொடரும் உருவாகியுள்ளது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரை டி கம்பெனி சார்பில் துரை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்த வெப் தொடரின் டீசர் வெளியான நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வெப் தொடர் வரும் மே 13-ஆம் தேதி ஆஹா ஓடிடித்தளத்தில் ஒளிப்பரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

