விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் அசத்தல் அப்டேட் இதோ!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் ,கணேஷ் வெங்கட்ராம், ஷாம் ,சங்கீதா, யோகி பாபு ,சம்யுக்தா உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் லலித் குமார் வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் மற்றும் விஜய்யின் 67 படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் வாரிசு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், வெளிநாட்டு விநியோகம், ஹிந்தி டப்பிங் ரைட் உள்ளிட்ட பல வியாபாரங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தமிழக வெளியீடு உரிமையை பெற்றுள்ளார்.
தமிழக வெளியீட்டு உரிமையை லலித்குமாருக்கு தில் ராஜு வழங்கியுள்ள நிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்றும் , விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.