அடுத்த படத்திற்கு தயாராகும் ‘லெஜெண்ட்’ சரவணன்... வாய்பிளக்கும் ரசிகர்கள் !

the legend

‘தி லெஜெண்ட்’ படத்திற்கு பிறகு அடுத்த படத்திலும் நடிப்பேன் என்று சரவணன் தெரிவித்துள்ளார். 

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் ‘தி லெஜண்ட்’  படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

the legend

இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்கி வருகின்றனர். ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

the legend

கடந்த மே 29-ஆம் தேதி இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சரவணன், இந்த படம் நிச்சயம் இந்திய அளவில் பேசப்படும் என்றும், ‘தி லெஜண்ட்’ படத்திற்கு பிறகு அடுத்த படத்தில் விரைவில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. 

 

Share this story