" பயத்தால் வாழ்க்கையை சிக்கலாக்குகிறோம்" - நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்!!

வாழ்க்கை மிகவும் எளிதானது, அதை பயத்தினால் தான் சிக்கல் ஆக்குகிறோம் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சிங் தற்போது இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார. பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிரபலங்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், " தங்கள் வேலையில் இருந்து கவனம் சிதறிவிடும் என்பதால் தான் காதல் வாழ்க்கையைப் பற்றி பலர் பேசுவதில்லை. கேமரா முன் நடிக்கிறேன்.
மீதம் இருக்கும் இடங்களில் நான் நானாக இருக்கிறேன். எல்லோருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துணை என ஒருவர் இருப்பது இயல்பானது. நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. மனிதர்கள் வேலை இல்லாமல் கூட இருக்கலாம் ; ஆனால் துணையில்லாமல் இல்லை. எனக்கும் ஜாக்கிக்கும் பார்ட்னருக்கு சரியான மரியாதை கொடுக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளது. நாங்கள் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். காதலை வெளியே தெரிவித்து விட்டதால் எங்கள் காதல் வாழ்க்கை பற்றிய மற்றவர்களின் யூகங்கள் எளிதாக மாறிவிடுகிறது. வாழ்க்கை மிகவும் எளிமையானது. அதை நமது பயத்தின் காரணமாகவே சிக்கலாகிக்கிறோம். நான் அந்த பயத்துடன் செயல்படவில்லை " என்றார்.