‘தளபதி 67’ அப்டேட்டுகள் அப்போ கண்டிப்பா வெளியாகும் - லோகேஷ் கனகராஜ் தகவல்..

thalapathi 67

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து   விஜய்  அடுத்ததாக   தனது 67 வது படத்திற்கு  இயக்குனர்  லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார்.   ‘விக்ரம்’ படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு  லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு  விஜய் - லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையவுள்ளதால் ‘தளபதி 67’ படம் மிகுந்த கவனம் பெறுகிறது. க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தில் 40 வயதுடைய கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளார். மும்பை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படவிருக்கிறது.
 T67
அத்துடன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 4 பேர்  நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கைதி திரைப்படம் வெளியாகி 3  ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் அதனை பகிர்ந்து கொண்டாடினர். இந்த நிலையில் இதுகுறித்து மகிழ்ச்சியஇ தனியார் ஊடகம் ஒன்றில்  பகிர்ந்துகொண்ட லோகேஷ் கனகராஜ்,  மிகவும் சந்தோஷமாக உள்ளது எனவும்,  LUC என்ற ஒரு யுனிவர்ஸ் அந்த படத்தில் இருந்து தொடங்கியது எனவும் அதனை மக்கள் மறக்காமல் மனதில் வைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

thalapathy 67

அதனைத் தொடர்ந்து பேசிய அவர்,   கைதி-2  அடுத்த ஆண்டு தொடங்கும்  என்றார்.  தற்போது நான் பணியாற்றி உள்ள திரைப்படத்திற்கு பிறகாக அதன் பணிகளை தொடங்குவேன் என தெரிவித்தார்.  ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் தளபதி 67 படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த  அவர்,   டிசம்பர் முதல் வாரத்தில் தளபதி 67  படம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகும் என உறுதி அளித்துள்ளார்.

 

Share this story