புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் நடிகர்... முதல் ஷாட்டை தொடங்கி வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் !

lokesh kanagaraj

நடிகர் ரியோராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தொடங்கி வைத்தார். 

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த ரியோராஜ், ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இந்த சீரியலுக்கு பிறகு ‘சத்ரியன்’, ‘காதல் ஒன்று கண்டேன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 

lokesh kanagaraj

இதையடுத்து தற்போது தனது மூன்றாவது படத்தில் ரியோராஜ் நடிக்கவுள்ளார். மீசைய முறுக்கு, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஹரிஹரன் இப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா ஆகிய இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். 

lokesh kanagaraj

இவர்களுடன் சார்லி, அன்புதாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைக்கிறார். பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான அன்பை பேசும் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

lokesh kanagaraj

இந்நிலையில் இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துக்கொண்டு முதல் ஷாட்டை தொடங்கி வைத்தார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

lokesh kanagaraj

 

 

 

Share this story