"உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை"... லவ் டுடே நடிகர் உருக்கம்

love today

கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tamil box office: Love Today has a Very Good weekend with Excellent trend,  Coffee with Kadhal and Nitham Oru Vanam Dull | PINKVILLA

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் எழுதியுள்ள கடிதத்தில், “இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும், அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆவதையும், குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேஷியா etc).

 நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி.

 நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்து கொண்டுஇருக்கிறேன். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி.

 நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

Share this story