பொங்கலுக்கு டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘லவ் டுடே’... ரசிகர்கள் என்ஜாய் பண்ண ரெடியா இருங்க

love today

‘லவ் டுடே’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவிருக்கிறது. 

 ‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. முதல்முறையாக ஹீரோவாக இந்த படத்தின் மூலம் களமிறங்கினார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22வது படமாக இப்படம் உருவாகி வெளியானது. காமெடி கலந்த காதலை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்தது.

love today

இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியிருந்தது வெளியாகியுள்ளத சமகால காதலை பற்றி பேசியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகவிருக்கிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story