50 கோடி கிளப்பில் இணைந்த ‘லவ் டுடே’.. வசூலில் சாதனை மழை !

love today

 பிரதீப் ரங்கநாதனின் ‘லல் டுடே’ திரைப்படம் 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 

விஜய்யின் தெய்வீக காதல் போன்று இல்லாமல், சமகால காதலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘லவ் டுடே’. படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல் காதலின் இன்றைய நிலை என்ன என்பது இயல்பாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

love today

‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.  இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் முதல் நாளில் 3 கோடியாகவும், இரண்டாம் நாள் 5.35 கோடியாகவும், மூன்றாம் நாள் 6.25 கோடியாகவும் இருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து சில நாட்களிலேயே 50 கோடியை ஈட்டியுள்ளது. இது படக்குழுவினரை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. 

Share this story