'உங்கள் வாழ்த்தால் வியப்படைந்தேன்' - எம்.எம்.கீரவாணி உருக்கமான ட்வீட் !

keeravani

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி என கோல்டன் குளோப் விருதுபெற்ற எம்.எம்.கீரவாணி தெரிவித்துள்ளார். 

 ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தார். உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான இப்படம் 750 கோடிக்கு வசூல் சாதனை படைத்தது.

keeravani

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வெளியானது. இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். அவரது இசையில் வெளியான நாட்டு நாட்டு‌ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூப்பிலும் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். 

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பாடல் கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிட்டது. மொத்தம் இந்த பிரிவில் 5 பாடல்கள் போட்டியிட்ட நிலையில் சிறந்த ஒரிஜினல்  பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை எம்.எம்.கீரவாணி தனது கையால் விருது குழுவினரிடமிருந்து வாங்கினார். 

இந்த விருதை வாங்கிய கீராவணிக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த, கமல்ஹாசன், இளையராஜா உள்ளிட்டோரும் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எம்.எம்.கீரவாணி, கோல்டன் குளோப் விருதால் எனக்கு இன்னும் பொறுப்பு அதிகரித்துள்ளது. அதனால் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 

 

 

 

Share this story