‘பேட்ட’ 4 ஆண்டுகள் நிறைவு... பூங்கொடி புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகன் !

malavika

 ‘பேட்ட’ படத்தின் 4 ஆண்டுகள் நிறைவு கொண்டாடும் விதமாக நடிகை மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் மரண மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, மாளவிகா மோகனன், நவாசுதீன் சித்திக்  உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

malavika

இந்த படத்தில் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். ‘பூங்கொடி’ என்ற அவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தது. இந்நிலையில் ‘பேட்ட’ திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதையடுத்து அது நினைகளை ரசிகர்களிடையே நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார். 

malavika

இது குறித்து தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள அவர், பேட்ட திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துக்கள். தலைவருடனான(ரஜினி) எனது நினைவுகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனைத்து அற்புதமாக மனிதர்களுக்கும் என் நினைவுகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.   

malavika

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பேட்ட படத்திற்கு பிறகு விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்தார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

malavika


 

Share this story