மாளவிகா பர்த்டே பார்ட்டியில் விஜய் சேதுபதி... மீண்டும் இணைந்த ‘மாஸ்டர்’ கூட்டணி !
மாளவிகா மோகனனின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் பூங்கொடியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தனுஷுடன் இணைந்து ‘மாறன்’ படத்தில் நடித்தார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது பிறந்தநாளை நடிகை மாளவிகா மோகனன் கொண்டாடி வருகிறார். இந்த பிறந்தநாள் பார்ட்டில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இதில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.