தமிழில் ரீமேக்காகும் மலையாளத்தின் சூப்பர் ஹிட் படம்... புதிய தகவல் !

Malayalam Mukundan Unni Associates movie remake tamil

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ தமிழில் ரீமேக்காக தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் பன்முக திறமைக்கொண்ட வினித் சீனிவாசன், ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அபினவ் சுந்தர் நாயக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இதன் 2-ஆம் பாகமும் உருவாகவுள்ளது. 

Malayalam Mukundan Unni Associates movie remake tamil

ஒரு வழக்கறிஞர் தனது வழக்கில் வெற்றிப்பெற எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை உணர்த்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் சில திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக், விக்ருதி, ஆதி கப்யாரே கூடமணி, ஜோசப், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ஆகிய படங்களின் வரிசையில் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் இணையவுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story