மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘வாழை’.. ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியீட்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்த உதயநிதி !

Vaazhai

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘வாழை’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார். 

இயல்பான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், தனுஷின் கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதியை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வந்தார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 

Vaazhai,

இந்த படத்திற்கு புதிய படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இது குறித்து தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பை நடிகர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார். 

Vaazhai,

‘வாழை’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை ஹாட் ஸ்டார் நிறுவனமும், மாரி செல்வராஜின் நேவி ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 1994-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது. நான்கு சிறுவர்களின் படமாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story