மார்க் ஆண்டனி-ல் இணைந்த ‘நாடோடிகள்’ நடிகை... விஷால் படத்தின் முக்கிய அறிவிப்பு !

mark antony

‘மார்க் ஆண்டனி’ படத்தில் நாடோடி நடிகை அபிநயா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை அபிநயா. ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மற்ற நடிகைகள் போன்று இல்லாமல் செவித்திறன் குறையுடையவர். அதனால் இவரால் சரியாக பேசமுடியாது. இருந்தப்போதிலும் தன்னுடைய திறமையால் அழகாக நடித்து வருகிறார். தற்போது தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். 

mark antony

இந்நிலையில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அபிநயா இணைந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அபிநயா நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் தான் இந்த படத்தில் ‘புஷ்பா’ மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் சுனில் இணைந்தார். 

mark antony

 இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  

mark antony

இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு காலக்கட்டத்தில் உருவாகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்றும், தற்போதைய கதைக்களத்திலும் உருவாகிறது. அதனால் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Share this story