ஆர்யாவின் ‘காதர் பாட்ஷா’-ல் இணையும் மாஸ்டர் மகேந்திரன்..

kadhar basha muthuramalingam

ஆர்யாவின் ‘காதர் பாட்ஷா’ படத்தில் மாஸ்டர் மகேந்திரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கேப்டன்’ படத்திற்கு முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வருகிறார். ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ‘காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்து வருகிறார். 

kadhar basha muthuramalingam

வழக்கமாக கிராமத்து கதைக்களங்களில் உருவாகும் திரைப்படங்களை இயக்கி முத்தையா, இந்த படத்தையும் அதே பாணியில் இயக்கி வருகிறார். இந்த படத்தை  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். 

Master Mahendran

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  

 

Share this story