விறுவிறுப்பாக படமாகும் ‘மழைப்பிடிக்காத மனிதன்’... படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் !

Mazhai Pidikatha Manithan

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழைப்பிடிக்காத மனிதன்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், தற்போது  ‘கோலிசோடா’ படத்தில் புகழ்பெற்ற விஜய் மில்டன் இயக்கத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். 

Mazhai Pidikatha Manithan

சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா, தலைவாசல் விஜய், இயக்குனர் ரமணா, கன்னட நடிகர்கள் தனுஞ்ஜெயா, ப்ருத்திவி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையும் அமைத்து வருகிறார். 

Mazhai Pidikatha Manithan

இப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு டாமன், தியூ பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பின் புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. 

Share this story