பாலியல் வன்கொடுமையை பேசும் 'மெய்பட செய்'.. டிரெய்லர் வெளியீடு !
அறிமுக இயக்குனர் வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெய்ப்பட பேசு' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
எஸ்.ஆர் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெய்ப்பட செய்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேலு இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக ஆதவ் பாலாஜியும், கதாநாயகியாக மவுனிகாவும் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ் கபூர், 'ஆடுகளம்' ஜெயபால், சுந்தர், பெஞ்சமின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பரணி இசையமைப்பாளராகவும், வேல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். பாலியல் வன்கொடுமை குறித்து பேசும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

