சாம் சிஎஸ் இசையில் ‘நீ போதும் எனக்கு’... மைக்கேல் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீடு !

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள மைக்கேல் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மைக்கேல். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாகவும் மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை செளத்ரி தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் பாடியுள்ளார். ‘நீ போதும் எனக்கு’ என தொடங்கும் இந்த மெலோடி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.