தனுஷுடன் மீண்டும் இணைந்த மித்ரன் ஜவஹர்.. வேற லெவலில் உருவாகும் 50வது படம் !

d50

தனுஷின் 50வது படத்தில் பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னணி நடிகராக தனுஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து தனது 50-வது படத்தை தனுஷ், இயக்கி நடிக்கவும் உள்ளார். 'ராயன்' என்று தலைப்பில் உருவாகும் இந்த படம்  முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது. 

d50

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது. தற்போது இந்த படத்தின் கதை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கதை விவாதத்தில் தனுஷுடன் இணைந்து இயக்குனர் மித்ரன் ஜவஹரும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story