ஜெயிலருடன் இணைந்த மோகன்லால்.. மிரட்டலான போஸ்டர் வெளியீடு !

jailer

‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸாக உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. 

jailer

இந்த படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நேற்று நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் ஐதராபாத் சென்றார். அங்கு ரஜினி நடிக்கும் தரமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்துடன் நிறைவுபெற்று விடும் என கூறப்படுகிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிந்துவிட்டால் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ‘ஜெயிலர்’ படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் நெல்சன் வேகமாக பணியாற்றி வருகிறார். 

jailer

இந்நிலையில் இப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையொட்டி மோகன்லால் மிரட்டலான இருக்கும் மாஸ் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியுடன் மோகன்லால் இணைந்து நடிப்பது ‘ஜெயிலர்’ படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

 

Share this story