‘100 கோடி மனுஷனுக்கு ஆயிரம் கோடி ஆசை’... ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’... டிரெய்லர் வெளியீடு !

sasikumar

 சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

சசிகுமாரின்  ’ராஜவம்சம்’ படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நான் மிருகமாய் மாற’. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை ‘கழுகு’ படத்தின் இயக்குனர் சத்ய சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.  

sasikumar

இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். இவர்களுடன்  மதுசூதனன், துளசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து வருகிறார். 

sasikumar

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 100 கோடி மனுஷனுக்கு ஆயிரம் கோடி பிரச்சனை என பேசும் வசனங்கள் தெறிக்கவிடுகிறது. இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  

Share this story