நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குருமூர்த்தி’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

GuruMurthi
நட்ராஜ் நடிக்கும் ‘குருமூர்த்தி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குருமூர்த்தி’. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான கே.பி.தனசேகர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நட்டிக்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். இவர்களுடன் ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

GuruMurthi

ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு சத்ய தேவ் உதய சங்கர் இசையமைப்பாளராகவும், தேவராஜ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

Share this story