'நீ யாரோ' பாடல் வெளியீடு.. விமலின் 'துடிக்கும் கரங்கள்' அப்டேட்
விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'துடிக்கும் கரங்கள்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்து வருகிறார். விமலுக்கு ஜோடியாக இந்த படத்தில் மும்பை மாடல் மனிஷா நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை இப்படத்தை தயாரித்து வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நீ யாரோ என தொடங்கும் இந்த பாடலுக்கு ராகவ் பிசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை அரவிந்தக்ஷன் மற்றும் மிர்துளா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

