தாடியுடன் மிரட்டல் லுக்கில் நிதின் சத்யா.. ‘கொடுவா’ ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

நிதின் சத்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கொடுவா’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களுக்கு பிறகு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஹீரோவாக களமிறங்கியுள்ளார் நிதின் சத்யா. அறிமுக இயக்குனர் சுரேஷ் சாத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘கொடுவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நிதின் சத்யாவுக்கு ஜோடியாக சம்யுக்தா சண்முகநாதன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன் சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை துவாரகா ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில் தாடியுடன் மிரட்டலான லுக்கில் நிதின் சத்யா உள்ளார். இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞர், காதல் மற்றும் குடும்பத்தால் சந்திக்கும் பிரச்சனைதான் இப்படத்தின் கதை. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.