காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி - விஷாலுக்கு பிரதமர் மோடி பதில்

Modi and vishal

காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என நடிகர் விஷாலுக்கு, பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.  

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஷால். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் நடிகர் விஷால் ஹீரோவாக தமில் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து 'சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை என வெற்றி திரைப்படங்களை கொடுத்த தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை படைத்துள்ளார் விஷால். இந்த நிலையில், நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். பின்னர் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" இவ்வாறு பதிவிட்டு இருந்தார். 


இந்த நிலையில், நடிகர் விஷாலில் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அந்த பதிவை பகிர்ந்த பிரதமர் மோடி 'காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி' என பதிலளித்துள்ளார்.

Share this story